உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்குறள் போட்டி பரிசளிப்பு விழா

திருக்குறள் போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி : புதுச்சேரி, ஆலங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி துணை முதல்வர் ஆஷாராணி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியை செந்தாமரை வரவேற்றார். மாணவி தர்ஷிணியின் வரவேற்பு நடனம் நடந்தது.விழாவில், மாநில அரசின் நல்லாசிரியர் விருதாளர் செந்தில்குமார் பங்கேற்று, திருக்குறள் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.திருக்குறளுக்கு ஏற்ப மாணவ, மாணவியர்களின் குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழ் விரிவுரையாளர் அருள்மொழி தொகுத்து வழங்கினார்.தலைமை ஆசிரியை மேரி மார்கரெட் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ