உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடல் வழியாக மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

கடல் வழியாக மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

நாகப்பட்டினம் : நாகை அருகே கடல் மார்க்கமாக படகில் கடத்தி வரப்பட்ட, 1900 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆங்காங்கே போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாலை வழியாக மதுபானம் கடத்தி வந்தவர்கள், கடல் வழியாக மதுபாட்டில்கள் கடத்துவதாக எஸ்.பி., தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு, நாகூர் வெட்டாறு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற பைபர் படகை சோதனை செய்தனர். படகில், 5 சாக்கு மூட்டைகளில், 90 மி.லி. கொள்ளளவு உடைய 1900 புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து படகில் மது பாட்டில்கள் கடத்திய வாஞ்சூரைச் சேர்ந்த அஜித்குமார்,27, கார்த்தி,26, ஆகியோரை கைது செய்தனர்.மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர் படகு மற்றும் 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை