உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழுக் கடனை செலுத்த முடியாத பெண் தற்கொலை

குழுக் கடனை செலுத்த முடியாத பெண் தற்கொலை

காரைக்கால் : காரைக்கால் நிரவி விழிதியூர் மானப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி தெரசா, 49; இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தெரசா குழுக்கள் மூலம் பணம் பெற்று தனது மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் அவருக்கு தோலில் அரிப்பு ஏற்பட்டு பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் தனது கணவரிடம் இரண்டு கொலுசுகளை அடகு வைத்து பணத்தை பெற்று வரும் படி தெரசா கூறியுள்ளார். அவர் வெளியில் சென்ற பின் தெரசா வீட்டில் சமையல் அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சம்பவம் குறித்து காரைக்கால் போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை