மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றார் இந்தியாவின் வைஷாலி.நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே), நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான தொடரில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர்.நான்காவது சுற்றில் இளம் வைஷாலி 22, சுவீடனின் சீனியர் பியா கிராம்லிங்கை 61, சந்தித்தார். 'கிளாசிக்கல்' முறையிலான போட்டியில் வைஷாலி கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். 48 நகர்த்தல் வரை போட்டி சம நிலையில் இருந்தது. 49வது நகர்த்தலில் கிராம்லிங் செய்த தவறை பயன்படுத்திய வைஷாலி, 54 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹம்பி, உக்ரைனின் அனாவிடம் தோல்வியடைந்தார். நான்கு சுற்று முடிவில் வைஷாலி 8.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். ஹம்பி (3) கடைசி இடத்தில் (6வது) உள்ளார்.பிரக்ஞானந்தா ஏமாற்றம்ஆண்களுக்கான நான்காவது சுற்றில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதினர். கடைசி 74 போட்டியில் தோற்காமல் (70 வெற்றி, 4 'டிரா') வலம் வந்த நகமுரா, நேற்றும் சவால் கொடுத்தார். முடிவில் பிரக்ஞானந்தா 86 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். நான்கு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா (5.5) நான்காவது இடத்தில் உள்ளார். நகமுரா (7.0), அலிரேசா (6.5), கார்ல்சன் (6.0) முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025