உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மக்களுடன் முதல்வர் முகாமில் 1,022 மனுக்கள்

மக்களுடன் முதல்வர் முகாமில் 1,022 மனுக்கள்

மதுராந்தகம் : மதுராந்தகம் வட்டாரத்தில், 'மக்களுடன் முதல்வர்' முகாம், நேற்று மாமண்டூர் ஊராட்சியில் துவங்கியது.இம்முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து துறையினர்பங்கேற்றனர்.இதில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,சுந்தர், தணிக்கை உதவி இயக்குனர் பிராபாகர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.இதில், பொதுமக்களிடமிருந்து, 1,022 மனுக்கள் வரப் பெற்றன. இதில், மாமண்டூர், சிதண்டிமண்டபம், மெய்யூர், பிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, அதிகப்படியான மனுக்கள் குவிந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை