மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
1 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
2 hour(s) ago
தரைப்பாலத்திற்கு தடுப்புஅமைப்பது எப்போது?சித்தாமூர் அருகே, கோட்டைபுஞ்சை கிராமத்தில் இருந்து கயப்பாக்கம் செல்லும் சாலை உள்ளது. தினமும் இருசக்கர வாகனம், கார், பேருந்து என, ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.மேலும், இச்சாலை வழியாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சென்று வருகின்றனர். வனதுர்க்கை அம்மன் கோவில் அருகே, ஏரி உபரிநீர் கால்வாயை கடந்து செல்லும் தரைப்பாலம் உள்ளது.இந்த தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்காததால், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- க.கதிர், சித்தாமூர்.உடைந்த பாலத்தைசீரமைக்க கோரிக்கைகூடுவாஞ்சேரி, அருள் நகர் 40 அடி சாலையில், மழைநீர் வடிகால்வாய் மீது சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்தி, அருள் நகரில் இருந்து ஆதனூர் மற்றும் படப்பை சென்று வருகின்றனர்.இதற்கு முன் பெய்த மழை மற்றும் புயலில் பாலம் சேதமடைந்தது. ஆனால், சேதமடைந்து பல மாதங்களாகியும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, சேதமடைந்த பாலத்தை பருவமழைக்கு முன் சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.பிரேமலதா, அருள் நகர்.சேறும், சகதியுமான பஸ் நிறுத்தம்பயணியர் கடும் அவஸ்தைமாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி சந்திப்பு பகுதியில், புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள், திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன.இந்த நிலையில், பேருந்து நிறுத்த பகுதி சாலையிலிருந்து தாழ்வாக உள்ளதால், மழைநீர் குளம்போல் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, பேருந்து நிறுத்த பகுதியை சாலை மட்டத்திற்கு சமன்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.சந்திரசேகர், மாமல்லபுரம்.மழைநீருடன் கழிவுநீர் கலப்புகுடியிருப்புவாசிகள் அவதி மறைமலைநகர் என்.ஹெச் -- 2 சங்கரதாசர் தெருவில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் மழை நீருடன், கழிவு நீர் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது.மேலும், துர்நாற்றம் வீசுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய கழிவுநீரை சீரமைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆர்.ஜெயசீலன், மறைமலைநகர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago