மேலும் செய்திகள்
மின்விளக்கு எரியாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
9 hour(s) ago
அறிவியல் கண்காட்சி
9 hour(s) ago
சாகர் கவச் ஒத்திகை கடலோரம் கண்காணிப்பு
9 hour(s) ago
மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளான, செங்கல்பட்டு- - காஞ்சிபுரம் சாலை, செங்கல்பட்டு - திருப்போரூர் சாலை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இதில், பல கனரக வாகனங்கள் அதிக அளவில் பாரம் ஏற்றிச் செல்வதால், சக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், அதிக அளவில் கல் குவாரிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த லாரிகளில் பெரும்பாலானவை, அதிவேகத்திலும், அதிக பாரத்துடன் செல்வதால், பிற வாகன ஓட்டிகள் அச்ச உணர்வுடன் பயணிக்கின்றனர்.கடந்த வாரம், இந்த சாலையில் இரவு நேரங்களில், கனரக வாகனங்களால் நடந்த இரு வேறு விபத்துக்களில், இருவர் உயிரிழந்தனர்.எனவே, அதிக பாடம் ஏற்றிச்செல்லும் கல்குவாரி வாகனங்கள் மீது, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago