உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தெரு பெயர் பலகையில் தமிழுக்கு அவமரியாதை

தெரு பெயர் பலகையில் தமிழுக்கு அவமரியாதை

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியின் 70 வார்டுகளிலும், புதிய தெரு பெயர் பலகைகள் மற்றும் பழைய பலகைகளில் புதிதாக ஸ்டிக்கர் ஒட்ட, மாநகராட்சி நிதி 5.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் நடந்து வரும் பணியில் 5வது மண்டலம், 48வது வார்டில், வால்மீகி தெரு என்பதற்கு பதில், 'வால்மேகி' என, தவறுதலாக ஸ்டிக்கர் அச்சிடப்பட்டிருந்தது.அதேபோல், 4வது மண்டலம், 49வது வார்டில், அழகேசன் தெரு என்பதற்கு பதில், 'அழகோசன்' என, தமிழுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது.தமிழ் ஆர்வலர்கள் புகார், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, தவறுதலாக அச்சிடப்பட்ட இடத்தில் மட்டும், சரியான எழுத்தை அச்சிட்ட ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். இது குறித்து, ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை