உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் புதிய ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகம் துவக்கம்

திருப்போரூர் புதிய ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகம் துவக்கம்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இம்மக்களின் தேவைக்காக, கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர்., சாலை, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே ரேஷன் கடை உள்ளது.இங்கு, 2,500 ரேஷன் கார்டுதாரர்கள் இருந்தனர். இதில், கேளம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த ஜோதி நகர், கோவளம் சாலை, எம்.ஜி.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த, 1,200 கார்டுதாரர்கள், ஓ.எம் ஆரில் உள்ள ரேஷன் கடைக்கு, சிரமத்துடன் சென்று பொருட்களை வாங்கி வந்தனர். மேலும், ஒரே கடையாக இருந்ததால் கூட்ட நெரிசலிலும், மக்கள் காத்திருந்து அவதிப்படும் நிலை ஏற்பட்டது.எனவே, மேற்கண்ட ரேஷன் கடையை இரண்டாக பிரித்து, மக்களின் குடியிருப்பு அருகே ரேஷன் கடை துவங்கினால், மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, கேளம்பாக்கம்- - கோவளம் சாலை, அரசு பள்ளி அருகே, 2022- - 23ம் ஆண்டில், திருப்போரூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 11 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய நியாய விலை கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்து, சில வாரங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த புதிய ரேஷன் கடையில், மக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்ய, துவக்க விழா நேற்று நடந்தது.இதில், ஊராட்சி தலைவர் ராணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் ஆகியோர், ரேஷன் உணவு பொருட்களை மக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி