உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தீ விபத்தில் போதை வாலிபர் பலி

தீ விபத்தில் போதை வாலிபர் பலி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு, பட்டரைத் தெருவைச் சேர்ந்தவர் சேகர், 60. இவரது மகன் திருவேங்கடம், 22. இவர் மீது காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு மது போதையில் திருவேங்கடம் பெற்றோரிடம் பிரச்னை செய்துள்ளார். இதனால், இவரது பெற்றோர், தங்களின் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், நள்ளிரவு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த திருவேங்கடம்மூச்சுத்திணறி உயிரிழந்தார்.நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்த பெற்றோர், நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்ற போது, திருவேங்கடம்சடலமாக கிடந்தார். இதுகுறித்து, அவரது தந்தை சேகர், காஞ்சி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை