உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / துணை சுகாதார நிலைய கட்டடம் பாழ் 25 ஆண்டாக செயல்படாததால் அவலம்

துணை சுகாதார நிலைய கட்டடம் பாழ் 25 ஆண்டாக செயல்படாததால் அவலம்

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த போந்துார் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்கள், அவசர மருத்துவ தேவைக்கு, 7 கி.மீ., தொலைவில் உள்ள சூணாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது 8 கி.மீ., தொலைவில் உள்ள கயப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருகின்றனர்.போந்துார், பனையடிவாக்கம், விளாங்காடு, அமந்தங்கரணை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில், போந்துார் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில், 25ஆண்டுகளுக்கு முன் பள்ளி வளாகத்தில், அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. ஆனால், துவங்கப்பட்ட நாளில் இருந்து சுகாதார நிலையம் செயல்படவில்லை.அதனால், பராமரிப்பு இன்றி, தற்போது சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.ஆகையால், தற்போது வரை அவசர மருத்துவ சேவைக்காக, சூணாம்பேடு அல்லது கயப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வரும் நிலையே தொடர்கிறது.எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருதி, போந்துார் ஊராட்சியில் புதிய துணை சுகாதார நிலையம் அமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை