உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்மருவத்துார் -- திருவண்ணாமலை கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை

மேல்மருவத்துார் -- திருவண்ணாமலை கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை

மேல்மருவத்துார்:மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு விசேஷ நாட்கள், பண்டிகை நாட்கள், பவுர்ணமி, அமாவாசை நாட்கள் என, அனைத்து நாட்களிலும் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.அதேபோல், திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம், மஹா சிவராத்திரி மற்றும் பவுர்ணமி நாட்களில், கிரிவலம் செல்வதற்காக அதிகப்படியான பக்தர்கள் செல்கின்றனர்.ஆன்மிக தலமான, மேல்மருவத்துார் -- திருவண்ணாமலையை இணைக்கும் வகையில், தற்போது தடம் எண்: 208 என்ற அரசு பேருந்து மட்டும், திருவண்ணாமலை வரை சென்று வருகிறது.இதனால், பேருந்தில் போதிய இடம் இல்லாமல் பயணியர் மற்றும் பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.தற்போது, கூடுதலாக மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கத்தில் இருந்து வந்தவாசி, சேத்பட், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி