உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கரும்பாக்கத்தில் மேல்நிலை தொட்டி விரைவில் திறப்பு

கரும்பாக்கத்தில் மேல்நிலை தொட்டி விரைவில் திறப்பு

மறைமலைநகர்:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், பாலூர் ஊராட்சி, கரும்பாக்கத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராமத்தின் மையப் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.இந்த குடிநீர் போதுமானதாக இல்லாததால், கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, 15வது நிதிக்குழு மானியத்தில், 18 லட்சம் ரூபாய் செலவில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி