உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூரியம்பாக்கம் நிழற்குடை சேதம் புதிதாக அமைக்க வேண்டுகோள்

பூரியம்பாக்கம் நிழற்குடை சேதம் புதிதாக அமைக்க வேண்டுகோள்

சித்தாமூர்:சித்தாமூர் அருகே மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு சாலையில், பூரியம்பாக்கம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.கிராம மக்கள் சித்தாமூர், மேல்மருவத்துார், மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்ல, இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.மேலும், இப்பகுதியில் தனியார் பள்ளிகள் மற்றும் தொழிற்சாலை செயல்படுகிறது. பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் இங்குள்ள நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், இந்த நிழற்குடை சேதமடைந்து உள்ளதால், நிழற்குடையை பயன்படுத்த முடியாமல், பள்ளி மாணவர்கள் அவதிப் படுகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய நிழற்குடையை அகற்றி, புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை