உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நடமாடும் ரேஷன் கடை அமைக்க அருங்குன்றம்வாசிகள் வலியுறுத்தல்

நடமாடும் ரேஷன் கடை அமைக்க அருங்குன்றம்வாசிகள் வலியுறுத்தல்

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய அருங்குன்றம் ஊராட்சியில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிவாசிகள், 3 கி.மீ., தொலைவில் உள்ள பெருமாள்கோவில் அருகே உள்ள ரேஷன் கடைக்கு சென்று, பொருட்களை பெற்று, தலையில் சுமந்து வருகின்றனர்.குறிப்பாக, இருளர் பகுதி மக்கள் கூலி வேலைக்கு சென்று விடுகின்றனர். ரேஷன் கடை 3 கி.மீ., துாரம் இருப்பதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், விடுப்பு எடுத்து பொருட்களை வாங்குவதற்கு செல்கின்றனர். மேலும், சர்வர் பிரச்னை, பொருட்கள் இருப்பு குறைவு போன்ற நேரங்களில், மீண்டும் மீண்டும் செல்ல வேண்டியுள்ளது. இதனால், மாணவர்கள், முதியோர்கள் உட்பட அனைவரும் சிரமப்படுகின்றனர்.இந்த அவல நிலையை போக்கிட, அப்பகுதிவாசிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக, நடமாடும் ரேஷன் கடை அமைக்க வேண்டி, துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.ஆனால், இதுவரை எந்த மனு மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் நடமாடும் ரேஷன் கடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை