உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கழிவுநீர் கால்வாய் வசதியின்றி கூடுவாஞ்சேரிவாசிகள் தவிப்பு

கழிவுநீர் கால்வாய் வசதியின்றி கூடுவாஞ்சேரிவாசிகள் தவிப்பு

கூடுவாஞ்சேரி: நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, முதலாவது வார்டுக்கு உட்பட்ட மீனாட்சி நகர் மூன்றாவது தெரு, அருள் நகர் கல்பனா சாவ்லா தெரு உள்ளிட்ட பகுதிகளில், சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், மிகுந்த சிரமம் அடைகின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:மீனாட்சி நகர் மூன்றாவது தெருவில், சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில், மிகவும் மோசமாக உள்ளன. அதேபோல், அருள் நகர், கல்பனா சாவ்லா தெரு உள்ளிட்ட பகுதிகளில், கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாமல், சிரமம் அடைந்து வருகிறோம்.இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளான சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை