மேலும் செய்திகள்
சாலையோரம் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சம்
4 hour(s) ago
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
4 hour(s) ago
சமதளமற்ற ரயில்வே கேட் அரையப்பாக்கத்தில் அவதி
4 hour(s) ago
மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தில், காப்புக் காடுகளுக்கு இடையே தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இங்கு, சென்னை பெருநகர காவல், தாம்பரம், ஆவடி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை, இங்கு கொண்டு வந்து எரித்து அழிப்பது வழக்கம்.நேற்று காலை வடக்கு மண்டல காவல் துறை எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து, 212 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 956.65 கிலோ கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.மேலும், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், 6.5 டன் எடை கொண்ட கஞ்சா பொருட்களை, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மித்தல் தலைமையில் போலீசார் அழித்தனர்.இதில், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., சாய் பிரனீத், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago