மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
3 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
3 hour(s) ago
சித்தாமூர் : சித்தாமூர் அருகே உள்ள சின்னவெண்மணி ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.சின்னவெண்மணி காலனி பகுதியில், கடந்த 50 ஆண்டுகளாக மயானத்திற்கு செல்ல நிரந்தர பாதை இல்லாததால், தனி நபர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாக உடலை எடுத்துச் சென்று, மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.மழைக்காலத்தில் வயல்வெளியில் மழைநீர் தேங்குவதால், சடலத்தை எடுத்துச் செல்ல கடும் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், மயானத்திற்கு பாதை அமைக்க, தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில், நேற்று சின்னவெண்மணி கிராமத்தை சேர்ந்த வடமலை, 58, நேற்று உடல்நலவு குறைவு காரணமாக உயிரிழந்தார்.இவரது உடலை அடக்கம் செய்வதற்காக, தனி நபர்களுக்கு சொந்தமான நெல் பயிரிடப்பட்டடு அறுவடைக்கு தயாராக இருந்த வயல்வெளி வழியாக, உறவினர்கள் சடலத்தை எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்களின் நலன் கருதி, மயானத்திற்கு செல்ல நிரந்தரமான பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3 hour(s) ago
3 hour(s) ago