மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
5 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
5 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
5 hour(s) ago
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த சின்னகயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட புதிய காலனி பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.புதிய காலனி, மூன்றாவது தெருவில் சாலை வசதி இல்லாமல், மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி, அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், சிமென்ட் கல் சாலை அமைக்க, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டன.சாலை ஓரத்தில் தடுப்பு அமைக்கப்பட்டு, ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்ட நிலையில், சாலை பணி திடீரென நிறுத்தப்பட்டது. கடந்த ஐந்து மாதங்களாக சாலை அமைக்கப்படாமல், ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்டுள்ள சாலையில் நடந்து செல்ல, அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:நான், புதிய காலனி மூன்றாவது தெருவில், பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இங்கு, சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். பின், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.பின், தொழில்நுட்ப அனுமதி கிடைக்காததால், சாலை பணி பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின், மீண்டும் சாலை அமைக்கும் பணி துவங்கப்படவே இல்லை.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணியை, பொது நிதி வாயிலாக விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago