மேலும் செய்திகள்
சாலையோரம் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சம்
3 hour(s) ago
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
3 hour(s) ago
சமதளமற்ற ரயில்வே கேட் அரையப்பாக்கத்தில் அவதி
3 hour(s) ago
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி காரணைப்புதுச்சேரி பிரதான சாலையில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கும் செயல்படாத கட்டடம் உள்ளது.இந்தக் கட்டடத்தின் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காலி மனையில், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து பெறப்படும் குப்பை கொட்டி சேமிக்கப்பட்டு வருகின்றன.அவ்வாறு சேமித்து வைக்கும் குப்பையை உடனுக்குடன் அகற்றாததால், குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, பகுதிவாசிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்தது.இது குறித்து, சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பகுதிவாசிகள் கலெக்டருக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அதன் விளைவாக, லோக்சபா தேர்தலுக்கு முன், குப்பை உடனுக்குடன் அகற்றப்பட்டது. தொடர்ந்து, குப்பை தேங்கிய நிலையில், நேற்று மாலை 3:00 மணியளவில், மர்ம நபர்கள் குப்பையில் தீ வைத்து சென்றுள்ளனர். குப்பை மேடு பற்றியெரிந்து, சுற்றிலும் கரும்புகை வெளியேறியது.அப்பகுதிவாசிகள், இது குறித்து மறைமலை நகர் தீயணைப்பு துறை நிலைய மேலாளர் கார்த்திகேயன் தலைமையில், ஏழு பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இது குறித்து, மறைமலை நகர் தீயணைப்புத்துறை நிலைய மேலாளர் கார்த்திகேயன் கூறியதாவது:ஊரப்பாக்கம் ஊராட்சி குப்பை கிடங்கில், தற்போது 13வது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு குப்பை கிடங்கில், தொடர்ச்சியாக தீ விபத்து ஏற்படுவது வருத்தமாக உள்ளது.ஊராட்சி நிர்வாகத்தினரே, வேண்டுமென்றே குப்பை கிடங்கில் தீ வைத்து விட்டு, எங்களுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். இது குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கலெக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago