மேலும் செய்திகள்
மின்விளக்கு எரியாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
8 hour(s) ago
அறிவியல் கண்காட்சி
8 hour(s) ago
சாகர் கவச் ஒத்திகை கடலோரம் கண்காணிப்பு
8 hour(s) ago
கூவத்துார்:கூவத்துார் அடுத்த பாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 35. எலக்ட்ரிஷியன். இவர், நேற்று பரமண்கேணியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை பயணவழி உணவகத்தில் பார்சல் வாங்கிக்கொண்டு, தனது பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது, பயணவழி உணவகத்தின் எதிரே, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற அரசு பேருந்து, ராஜேஷ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து, கூவத்துார் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த போலீசார் வழக்குப்பதிந்து, ராஜேஷ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்தை பறிமுதல் செய்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago