உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுகாதார மையம் சீரழிவு புதிய கட்டடம் எப்போது?

சுகாதார மையம் சீரழிவு புதிய கட்டடம் எப்போது?

புதுப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில், துணை சுகாதார மையம் இயங்குகிறது. புதுப்பட்டினம் மற்றும் அருகில் உள்ள கிராம பகுதியினர், சிகிச்சை, மகப்பேறு ஆலோசனைக்கு இங்கு வருகின்றனர்.தற்போது, நலவாழ்வு மையமாக செயல்படுகிறது. அதன் கட்டடம், நீண்ட காலத்திற்கு முன்பே சீரழிந்தது. அதை ஒட்டியுள்ள வேறு குறுகிய கட்டடத்தில், தற்போது இயங்குகிறது.இக்கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், தனியார் கிளினிக், சதுரங்கப்பட்டினம், வட்டார ஆரம்ப சுகாதார மையம் என, மக்கள் சென்று சிரமப்படுகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன், பல்வேறு பகுதிகளில் இயங்கும் துணை சுகாதார மையங்களுக்கு, தலா 25 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டப்பட்டது.இப்பகுதி மையம், பழைய கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ளதால், சாலை விரிவாக்கத்திற்காக, புதிய கட்டடம் கட்டுவது நிறுத்தி வைக்கப்பட்டது.ஆனால், சாலை மேம்பாட்டை தவிர்த்து, வேறிடத்தில் புறவழி சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சீரழிந்த கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்டுவது அவசியம்.ஆனால், தற்போதும் நடவடிக்கை இல்லை. எனவே, சுகாதார மைய முக்கியத்துவம் கருதி, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்