உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மொறப்பாக்கம் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி அமையுமா?

மொறப்பாக்கம் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி அமையுமா?

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியம், மொறப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டு, கலைஞர் நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு, 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், கை பம்பு மற்றும் மினி குடிநீர் டேங்க் வசதி அமைக்கப்படாததால், அத்தியாவசிய தேவைகளுக்கு, போதிய தண்ணீர் இன்றி அப்பகுதிவாசிகள் தவித்து வருகின்றனர்.அதனால், புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மொறப்பாக்கம் கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை