உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எஸ்.ஆர்.எம்., கல்லுாரி மாணவருக்கு பணி ஆணை

எஸ்.ஆர்.எம்., கல்லுாரி மாணவருக்கு பணி ஆணை

மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம், கிரஸ்ட் -- 24 விழா கல்லுாரி முதல்வர் வாசுதேவராஜ் தலைமையில் நடந்தது.இயக்குனர் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். வளாக வேலை வாய்ப்பு அதிகாரி ரங்கராஜன் ஆண்டறிக்கை வாசித்தார்.சிறப்பு விருந்தினராக, விப்ரோ நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல தலைவர் அனந்த கிருஷ்ணன் தேவராஜ், வளாக நேர்காணலில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்ற, 434 மாணவ -- மாணவியருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.முனைவர் சிவசங்கர் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவ -- மாணவியர், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ