உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மக்களுடன் முதல்வர் முகாம் மாமல்லையில் 371 மனு ஏற்பு

மக்களுடன் முதல்வர் முகாம் மாமல்லையில் 371 மனு ஏற்பு

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் , கண்காணிப்பு அலுவலர் வெற்றிகுமார் தலைமையில், மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.பேரூராட்சிகள் உதவி இயக்குனர் லதா, பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வருவாய், உள்ளாட்சி, நகர்ப்புற வளர்ச்சி, சமூக நலன், மின் வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்கள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றனர். வருவாய்த் துறையிடம் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்டவை கோரி 252 பேர், பேரூராட்சி நிர்வாகம் சார்ந்த 49, மின் வாரியம் சார்ந்த 15 உள்ளிட்ட 371 மனுக்கள் அளிக்கப்பட்டன.மாமல்லபுரத்தில் வர்த்தக பயன்பாடு கட்டடங்களுக்கு, புதிய மின் இணைப்பு வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க வலியுறுத்தப்பட்டது.பேரூராட்சி நிர்வாகத்திடம், கட்டட பணி நிறைவு சான்று பெற்று அளித்தால், மின் இணைப்பு அளிப்பதாக, மின் வாரியத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை