| ADDED : பிப் 14, 2024 11:28 PM
சென்னை:தேசிய அளவிலான, போசியா பாரா ஒலிம்பிக் போட்டி, மத்திய பிரதேச மாநிலத்தில், 12ம் தேதி நடந்தது. இந்தியாவில் இருந்து, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 100 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இதில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து எட்டு பேர் பங்கேற்றனர்.இவர்களுக்கான, போசியா விளையாட்டு பயிற்சியை, சென்னை ஏக்தா நிறுவனம் அளித்தது. நான்கு பிரிவுகளின் கீழ் போட்டி நடந்தன. இரண்டாவது பிரிவில், தனியாக விளையாடியதில், சென்னையை சேர்ந்த லட்சுமிபிரபா முதல் பரிசாக தங்கப் பதக்கம் பெற்றார். வினோத்குமார் வெள்ளிப் பதக்கம், சபானா பர்வின் வெங்கல பதக்கம் பெற்றார்.மேலும், குழு விளையாட்டில் சபானா பர்வீன் தங்கப் பதக்கமும், வினோத்குமார் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.அடுத்து, இவர்கள் உலக அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.