| ADDED : டிச 12, 2025 06:24 AM
திருப்போரூர்: தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் மீன்குஞ்சு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய சோனலுார் தாங்கல் ஏரி, அனுமந்தபுரம் சித்தேரி உள்ளிட்ட ஏரிகளில், 1.32 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்க இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, சோனலுார் ஊராட்சியில் உள்ள ஏரியில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில், மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று 27,000 மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி, படூர் ஊராட்சி தலைவர் தாரா உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல, மாமல்லபுர்ம அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரியில், வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை, 13.08 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.