செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், தாம்பரம், மதுராந்தகம், உத்திரமேரூர், திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இதில், திருமணம், கோவில் திருவிழா, பண்டிகை நாட்களில், பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகமாக வருகின்றனர்.இவர்கள் பேருந்தில் ஏறும்போது, மொபைல் போன், பணம், நகைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர்.காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளுக்கு செல்வோர், பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்கின்றனர். அப்போது, அவர்களிடம் மொபைல் போன்களை மர்ம நபர்கள் பறித்துச்செல்கின்றனர்.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மீது, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இப்பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததால், தொடர்ந்து திருட்டு நடக்கிறது. இதை தடுக்க, புதிய பேருந்து நிலைய பகுதியில், 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.