உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஊனமலை காட்டில் ஆண் உடல் மீட்பு

ஊனமலை காட்டில் ஆண் உடல் மீட்பு

மேல்மருவத்துார் : மேல்மருவத்துார் அடுத்த ஊனமலை ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில், நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர், நாவல் மரத்தில்,துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.அதைக் கண்ட கால்நடை மேய்ப்பவர்கள், அதுகுறித்து ஊனமலை வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற வி.ஏ.ஓ., மற்றும் மேல்மருவத்துார் போலீசார், துாக்கிட்டு இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின், வழக்கு பதிவு செய்து, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை