உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.45 லட்சம் நிதி

இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.45 லட்சம் நிதி

சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணியின்போது சாலை விபத்து, பணிமனையில் விபத்து, இயற்கை மரணம் மற்றும் நோய் வாய்பட்டு இறந்தாலும், அவர்களது சட்டப்படியான வாரிசுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, சக பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து, மாதம் 260 ரூபாய்க்கு மிகாமல் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. பணியின் போது உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி சென்னை, மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை மாநகர போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று, எட்டு பேரின் குடும்பத்தினருக்கு 45 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை