உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலி

மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலி

உத்திரமேரூர்,உத்திரமேரூர் பேரூராட்சி நீரடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 52. இவர், தன் விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு குப்பையநல்லுார் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள், 62, என்பவர், நீரடியில் நடைபெறும் அம்மன் கோவில் விழாவிற்காக அப்பகுதி விவசாய நிலங்களின் வழியாக சென்றார்.அப்போது, ஆனந்தன் நிலத்தில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உத்திரமேரூர் போலீசார், சட்ட விரோதமாக மின் வேலி அமைத்த ஆனந்தனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை