உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெர்ட்ரம் நினைவு கோப்பை விளையாட்டு போட்டி துவக்கம்

பெர்ட்ரம் நினைவு கோப்பை விளையாட்டு போட்டி துவக்கம்

சென்னை : லயோலா கல்லுாரி நிறுவனர் 'பெர்ட்ரம்' நினைவு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், 90வது ஆண்டாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில், நேற்று துவங்கின.இதில், பள்ளிகளுக்கு இடையிலான பால் பேட்மின்டன், வாலிபால் மற்றும் கூடைப்பந்து; கல்லுாரிகளுக்கு இடையிலான கபடி, டென்னிஸ், கோ - கோ, வாலிபால், செஸ், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள், இருபாலருக்கும் நடக்கின்றன. போட்டிகளில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.முதல் நாளான நேற்று, கல்லுாரிகளுக்கு இடையிலான டென்னிஸ் போட்டியும், பள்ளிகளுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டியும் நடத்தப்பட்டன.

* பள்ளி பால் பேட்மின்டன்:

பள்ளி புள்ளிகள் செட்ஆர்.கே.எம்., அரசு பள்ளி, செங்கல்பட்டு/ அரசு பள்ளி, கத்திவாக்கம் 35 - 25, 35 - 33 2 - 0 தி இந்து பள்ளி, திருவல்லிக்கேணி/ ஆர்.கே.எம்., மெட்ரிக் பள்ளி, செங்கல்பட்டு 35 - 17, 35 - 22 2 - 0 * கல்லுாரி டென்னிஸ்:பெயர், கல்லுாரி புள்ளிகள்ஒற்றையர் பிரிவு கவின் (லயோலா) vs தருண், (எஸ்.எஸ்.என்., 9 - 4சித்தார்த்(டி.ஜி., வைஷ்ணவ்) vs ஆலன் கிரிஷ்(குமரகுரு) 9 - 5இரட்டையர் :கவின், நன்மாறன் (லயோலா) vs தருண், வெற்றி( எஸ்.எஸ்.என்.,) 9 - 5சித்தார்த், சித்தீஷ்(லயோலா) vs ஆலன் கிரிஷ் vs சிவகுமார் ( எஸ்.எஸ்.என்., ) 9 - 5


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை