உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் உறங்கும் மாடுகள் மணலியில் வாகன ஓட்டிகள் பீதி

சாலையில் உறங்கும் மாடுகள் மணலியில் வாகன ஓட்டிகள் பீதி

மணலி, சென்னை மாநகராட்சி, இரண்டாவது மண்டலமான மணலியில், 15 முதல் 22 வரை, எட்டு வார்டுகள் உள்ளன.இதில், 16, 17, 18 ஆகிய வார்டுகளில் விவசாயம் நடப்பதால், கால்நடைகள் வளர்ப்பும் மிகுதியாக உள்ளது.இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளில் மாடுகளால் தொல்லை ஏற்படுவதாக, தொடர் புகார் எழுந்த வண்ணம் இருப்பதால், அவற்றை பிடித்து, அபராதம் விதிக்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் மணலியில், காமராஜர் சாலை, பாட சாலை தெரு, சின்னமாத்துார் சாலை, அரியலுார் சாலை, மணலிபுதுநகர் பிரதான சாலையில், மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிவதால், வாகன போக்குவரத்து மிகுதியாக பாதிக்கப்படுகிறது.மேலும், இரவு நேரங்களில் தெருவிளக்குகள் இல்லாத, கும்மிருட்டு சாலையில் படுத்துறங்கும் மாடுகள் தெரியாமல், வாகன ஓட்டிகள் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.மணலி மண்டலம், கிராமப்புறம் சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி இருப்பதால், இப்பிரச்னையை கையாள்வதில், மாநகராட்சி ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, இதற்கான சரியான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். மாடுகளால், வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை