உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குமரன் நகரில் நாய்கள் தொல்லை

குமரன் நகரில் நாய்கள் தொல்லை

அம்பத்துார் அடுத்த பாடி 88வது வார்டில், குமரன் நகர் விரிவாக்க பகுதி உள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள, முல்லை தெரு, பாரதியார் நகர் மற்றும் சக்தி நகரில் நாளுக்கு நாள், நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு தெருக்களிலும் 30க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன.கடந்த மாதம் மட்டும், நான்கு பேரை கடித்துள்ளது. குறிப்பாக, இரவு வேளைகளில் ஒருவரை கூட நடமாட விடாமல் கூட்டமாக குரைத்து துரத்துகிறது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இருசக்கர வாகனங்கள் வந்தாலே துரத்துகின்றன. இதனால், கூரியர் எடுத்து வரும் ஊழியர்கள், மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள், பால், செய்தித்தாள் வினியோகம் செய்வோர் என, எவரும் அந்த தெருக்களில் வர முடியாத நிலை உள்ளது. தெரு பலகையில் 'நாய்கள் ஜாக்கிரதை' என எழுதும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாஸ்கர், குமரன் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை