உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புழல் சிறை கைதியிடம் போதை மாத்திரை பறிமுதல்

புழல் சிறை கைதியிடம் போதை மாத்திரை பறிமுதல்

புழல், புழல் விசாரணை சிறையில் 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, சிறை காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அதில், பூந்தமல்லி அடுத்த நெமிலிச்சேரி இந்திரா நகரை சேர்ந்த கைதி வினோத், 25, என்பவரிடம், நான்கு போதை மாத்திரைகள் இருந்ததை சிறை காவலர்கள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.இவர், 2023 ஆக., 23ல், திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். வினோத்துக்கு போதை மாத்திரை கிடைத்தது எப்படி என, புழல் போலீசார் விசாரிக்கின்றனர். பூந்தமல்லி, கரையான்சாவடியில் உள்ள சிறையில் காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மாறன் என்பவர் பதுக்கி வைத்திருந்த, ஒரு செல்போன், இரண்டு சிம் கார்டுகள், மூன்று பேட்டரிகளை போலீசார் கைப்பற்றினர். அவருக்கு இவை எப்படி கிடைத்தன என, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை