| ADDED : ஏப் 28, 2024 01:11 AM
ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கத்தில் வரி செலுத்தாத, உரிமம் பெறாத ஆறு கடைகளுக்கு ஆலந்துார் மண்டல வருவாய்த்துறை அலுவலர்கள் 'சீல்' வைத்தனர்.சென்னை மாநகராட்சியில் ஆலந்தூர் மண்டலத்தில், 12 வார்டுகள் உள்ளன. மண்டலம் முழுதும் உள்ள வீடுகள், கடைகளில் பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் உள்ளோர் கணக்கெடுக்கப்பட்டனர்.வரி செலுத்தும் படியும், கடை நடத்துவோர் உரிமம் பெறவும் வருவாய் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஆலந்தூர் மண்டல வருவாய்த்துறை அலுவலர் திருபால் தலைமையில் 12 பேர் குழுவினர், நேற்று பல்வேறு இடங்களில், நீண்டநாள் வரி செலுத்தாத கடைகளை ஆய்வு செய்தனர்.163வது வார்டுக்கு உட்பட்ட கருணீக்கர் தெருவை சேர்ந்த கல்யாணி என்பவருக்கு சொந்தமான கடைகளுக்கு, பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல், 14.90 லட்சம் ரூபாய் நிலுவையில் இருந்தது. இதையடுத்து அந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அதேபோல, 167, 164 வார்டில் உரிமம் பெறாமல் நடத்தப்பட்ட கடைகள் என, மொத்தம் ஆறு கடைகளுக்கு சீல் வைத்தனர்.