உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அயோத்தியா மண்டபத்தில் சகஸ்ர சண்டி மகாயக்ஞம்

அயோத்தியா மண்டபத்தில் சகஸ்ர சண்டி மகாயக்ஞம்

சென்னை:ஜகத்குரு வேத பாராயண டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ சங்கர, 2,533வது ஜெயந்தியை முன்னிட்டு சகஸ்ர சண்டி மகாயக்ஞம் நடக்கிறது.மே 2ம் தேதி காலை 7:30 மணிக்கு குருவந்தனத்துடன் துவங்கி விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. மாலை சந்திர சேகர சரஸ்வதி சுவாமிகள் இயற்றிய கீர்த்தனம் நடக்கிறது.மே 3 முதல் 13ம் தேதி வரை சண்டி பாராயணம், சண்டி ஹோமம், பூர்ணாஹுதி நடக்கிறது. மே 4, இரவு 7:00 மணிக்கு கூடலி சிருங்கேரி மடத்தின் பீடாதிபதி அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகளுக்கு வரவேற்பும், அவரின் அருளாசியும் நடக்கிறது.மே 12ல் பவமான ஹோமம், ஆவஹந்தி ஹோமம், லகுந்யாஸ பூர்வக ஏகாதச ருந்ராபிஷேகம், ஆச்சார்யாள் அவதாரகட்ட பாராயணம் நடக்கிறது. மே 13ல் மகாலட்சுமி ஹோமம் நடக்கிறதுமே 3ம் தேதி முதல் தினமும் மாலை 7:00 மணி முதல் 9:00 மணிவரை நாடகம், உபன்யாசம் நடக்கிறது.மே 7 முதல் 11 வரை, தினமும் மாலை 3:30 மணி முதல் 7:00 மணி வரை சதுர்வேத பராயணம் நடக்கிறது. மாலை 6:00 மணி முதல் 7:00 மணிவரை ஆதி சங்கரர் விக்ரஹத்திற்கு அபிஷேக தீபாராதனை நடக்கிறது. ஆதிசங்கரரின், 2,500வது ஆராதனை மகோற்சவம் காஞ்சி சங்கர மடத்தில் மே 18ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை