உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடை பூட்டை உடைத்து திருட்டு

கடை பூட்டை உடைத்து திருட்டு

வேப்பேரி, கொசப்பேட்டை, வெங்கடாதிரி தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ், 39. புரசைவாக்கம் சுந்தரம் தெருவில், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.நேற்று காலை ஸ்டூடியோவை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே கல்லாவில் இருந்த, 2,000 ரூபாயை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தார். வேப்பேரி போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி