உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில அளவிலான செஸ் ஷ்ரேயாஸ், ரக் ஷா முதலிடம்

மாநில அளவிலான செஸ் ஷ்ரேயாஸ், ரக் ஷா முதலிடம்

சென்னை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள, ஸ்ரீஹயக்ரீவர் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 2வது மாநில அளவிலான செஸ் போட்டி, சிட்லபாக்கத்தில் உள்ள ரோஸ்லி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்தது.இதில் 8, 10, 13 மற்றும் 25 வயதிற்கு உட்பட்ட இருபாலருக்கும், தனித்தனியாக போட்டிகள் நடந்தன. 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.எட்டு வயது பிரிவில், ஆண்களில் செங்கல்பட்டைச் சேர்ந்த ஷ்ரேயாஷ், சிறுமியரில் ரக் ஷா ஆகியோர் முதலிடங்களை வென்றனர். அதேபோல், 10 வயதினர் பிரிவில், செங்கை ஜெயந்த் மற்றும் சென்னை மஹதியும், 13 வயது பிரிவில் செங்கை அரிக்சாண்டர் ஜானி மற்றும் செங்கை ருஹானி முதலிடம் பிடித்தனர். மேலும், 25 வயது பிரிவில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த ஸ்ரீ நிமேஷிகா ஆகியோர் வெற்றி பெற்று, முதலிடங்களை பிடித்தனர். மேலும், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 20 இடங்களைப் பிடித்த சிறுவர் - சிறுமியருக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. 8 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், அனைவருக்கும் கோப்பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்