உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

எம்.கே.பி.நகர், சென்னை வியாசர்பாடி, சர்மா நகர் எஸ்டேட் அருகில், எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவரது பையை சோதனையிட்டனர். அதில், போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.விசாரணையில், வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியைச் சேர்ந்த கணேஷ், 31, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை