உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் போலீசை வெட்டிய கணவருக்கு வலைவீச்சு

பெண் போலீசை வெட்டிய கணவருக்கு வலைவீச்சு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, சிறுகாவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன், 38; கம்ப்யூட்டர் மெக்கானிக். இவரது மனைவி டில்லிராணி, 33, விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில், முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.தம்பதிக்கு, 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஏழு வயதில் மகளும், மூன்று வயதில் மகனும் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.இந்நிலையில், நேற்று மதியம் 2:30 மணியளவில், சாலை தெருவிலுள்ள ஒரு ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்துக் கொண்டு, டில்லிராணி வெளியே வந்துள்ளார். காவலர் சீருடையில் இருந்த அவரை, கணவர் மேகநாதன் வழிமறித்து கை மற்றும் கால் பகுதிகளில், கத்தியால் வெட்டி உள்ளார்.ரத்த வெள்ளத்தில் வீழ்ந்த டில்லிராணியை அங்கிருந்தோர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேகநாதனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை