உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக்கில் இருந்து கீழே விழுந்து பெண் பலி

பைக்கில் இருந்து கீழே விழுந்து பெண் பலி

மதுரவாயல்:பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், ஜானகி நகரை சேர்ந்தவர் தஞ்சமூர்த்தி, 58. இவரது மகள் சங்கீதா, 24. போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் சங்கீதா வேலை செய்தார்.சங்கீதாவின் நண்பர் மாங்காட்டை சேர்ந்த சதாம் உசேன், 29 என்பவர், அண்ணா நகரில் உள்ள தனியார் மாலில் வேலை செய்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு மதுரவாயலுக்கு சென்ற சங்கீதா, பேருந்திற்காக மதுரவாயல் ரேஷன் கடை நிறுத்தத்தில் காத்திருந்தார்.அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சதாம் உசேன், சங்கீதாவை கடையில் விடுவதாக கூறி அழைத்துச் சென்றார். சதாம் உசேன், பைக்கை இயக்கிய போது, பின்னால் அமர்ந்திருந்த சங்கீதா திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை