உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., - எம்.பி., துாண்டி விடுவதாக பா.ஜ., நிர்வாகி அலிசா குற்றச்சாட்டு

தி.மு.க., - எம்.பி., துாண்டி விடுவதாக பா.ஜ., நிர்வாகி அலிசா குற்றச்சாட்டு

அண்ணா நகர், சென்னை, அண்ணா நகர் கிழக்கு, 'பி' பிளாக் பகுதியிலுள்ள குடியிருப்பில், வடசென்னை தி.மு.க. - எம்.பி., கலாநிதி அலுவலகம் இயங்கி வருகிறது. அதே குடியிருப்பில் மேல் பகுதியில், பா.ஜ., மாநில நிர்வாகி அலிசா அப்துல்லாவின் மாமனார் தேவராஜ் குடியிருக்கிறார்.இதே குடியிருப்பில் வசிக்கும் பிரபு என்பவரது கார் ஓட்டுனர் சரவணன், 25, என்பவருக்கும், அலிசா அப்துல்லா குடும்பத்திற்க்கும், கார் நிறுத்துவதில் பிரச்னை இருந்துள்ளது.நேற்று முன்தினம் இரவும் பிரச்னை ஏற்பட்டதால், சரவணன் அண்ணா நகர் போலீசில், அலிசா அப்துல்லா குடும்பம் மீது புகார் அளித்துள்ளார். அலிசா அப்துல்லா தரப்பிலும் புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து, அலிசா அப்துல்லா கூறுகையில், ''குடியிருப்பின் வெளியில், என் மாமனார் கார் நிறுத்தும் போது, எம்.பி., ஆதரவாளர்கள் தொடர்ந்து பிரச்னை செய்தனர். நேற்று, அவரது துாண்டுதல்படி, அவர் முன்னிலையில் பிரச்னை நடந்தது. நாங்கள் புகார் அளித்த போது, ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்து, சி.எஸ்.ஆர்., கூட வழங்கவில்லை,''என்றார்.எம்.பி., கலாநிதி கூறியதாவது:இந்த பிரச்னைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. பா.ஜ., நிர்வாகியின் வீடு இருப்பது, நேற்று காலை தான் தெரிந்தது. தேர்தல் நேரத்தில் பா.ஜ.,வினர் என் மீது அவதுாறு பரப்புகின்றனர். எங்களது தரப்பில் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. என் மீது புகார் அளித்துள்ள பா.ஜ., நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அண்ணா நகர் போலீசாரிடம் கேட்ட போது,'கார் நிறுத்துவதில் அலிசா அப்துல்லா குடும்பத்தினர் தொடர்ந்து பிரச்னை செய்தனர். இரு தரப்பிலும் புகார் பெற்று விசாரிக்கிறோம்; இதுவரை யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை