| ADDED : ஜன 28, 2024 12:20 AM
துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கம், பெருங்குடி பகுதியில், ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இங்கு, அடிக்கடி பூட்டு உடைப்பு சம்பவங்கள் நடக்கின்றன.பெருங்குடி, செம்பொன் நகர் காயலான் கடையை உடைத்து பணம் திருடப்பட்டது. இங்கு, வாரம் ஒரு கடை பூட்டு உடைக்கப்படும். அம்பேத்கர் நகர் அடகு கடை, காயலான் கடை, மொபைல் கடை பூட்டை உடைத்து, பணம், பொருட்கள் திருடப்பட்டன. திருவள்ளுவர் நகரில் மளிகை கடையில் திருடப்பட்டது.சந்தியா நகரில் அடுத்தடுத்த இரண்டு கடைகளில் பூட்டு உடைக்கும் போது, சத்தம் கேட்டு மக்கள் வந்ததால், திருடர்கள் தப்பி ஓடினர்.கடந்த மாதம், காமராஜர் நகரில் ஒரு டீக்கடையில் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.இந்த சம்பவங்கள், கடந்த இரண்டு மாதங்களில் நடந்துள்ளன. இதனால், வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.வியாபாரிகள் கூறியதாவது: பணம், பொருட்களை இழந்து போலீசில் புகார் அளித்தால், உடனே வழக்கு பதிவு செய்வதில்லைவலுவான அழுத்தம் கொடுப்போருக்கு மட்டும் எப்.ஐ.ஆர்., வழங்குகின்றனர். தனியாக சென்றால் வழங்குவதில்லை. ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.