உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ.,க்கு நவீன கேமரா

போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ.,க்கு நவீன கேமரா

சென்னை:சென்னையில், சாலை விதிமீறலில் ஈடுபடுவோரிடம் அபராதத் தொகையை பணமில்லா டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.அபராதம் விதிக்கும் எஸ்.ஐ.,களுக்கு சட்டையில் கேமரா பொருத்தப்பட்டது. இத்திட்டத்தில் வழங்கப்பட்ட கேமராக்களின் பேட்டரிகள், நீண்ட நேரம் பயன்படுத்த முடியாமலும், கை தவறி கீழே விழுந்தால் உடைந்துவிடும் அளவிற்கும் இருந்தது. அதற்கு மாற்றாக, தற்போது புதிதாக 50 நவீன கேமராக்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக, அபராதம் விதிக்கும் எஸ்.ஐ.,களுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டது.அவற்றின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர், இரு நாட்களுக்கு முன் எஸ்.ஐ.,களிடம் கேட்டறிந்தார். அதற்கு, 'ஒரு முறை சார்ஜ் செய்தால், 24 மணி நேரமும் பயன்படுத்த முடிகிறது. கீழே விழுந்தாலும் கேமரா உடையவில்லை. சட்டையில் பொருத்துவதற்காக காந்தகம் பயன்படுத்துவதால் எளிதாக உள்ளது' என்றனர். போக்குவரத்து எஸ்.ஐ.,க்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்ட அதிநவீன கேமரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்