மேலும் செய்திகள்
இட்லி தட்டில் சிக்கிய சிறுவனின் விரல்
2 hour(s) ago
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் இந்திய அணியினர் ஆதிக்கம்
2 hour(s) ago
தகராறை தட்டிக்கேட்டவரிடம் பணம் பறித்த மூவர் கைது
2 hour(s) ago
சென்னை:சென்னை, அம்பத்துார், மாதனாங்குப்பத்தில் உள்ள சோகா இகேடா கலை அறிவியல் கல்லுாரி சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான மகளிர் கைப்பந்து போட்டி, கடந்த 16, 17 ஆகிய இரு நாட்கள் நடந்தன.இதில், பெண்கள் கிறிஸ்துவ கல்லுாரி, எம்.ஓ.பிவைஷ்ணவ், அன்னைவயலட், அன்னை வேளாங்கண்ணி, செயின்ட்ஆன்ஸ், செவாலியர் தாமஸ் எலிசபெத், இந்துஸ்தான், சிந்தி, பாரதி, சோகா இகேடா, நாசரேத், ஸ்ரீ கிருஷ்ணசாமி உள்ளிட்ட 16 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.போட்டியின் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லுாரி அணியினர், அரையிறுதி ஆட்டத்தில் நாசரேத் கல்லுாரி அணியை, 25 - -15, 25 - -15 என்ற நேர் செட் கணக்கில் வென்று, இறுதி போட்டிக்கு முன்னேறினர். நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், அன்னை வேளாங்கண்ணி கல்லுாரி அணியை எதிர்த்து ஆடிய எம்.ஓ.பி., கல்லுாரி அணி வீராங்கனையர், முதல் செட் ஆட்டத்தை 28 - -23 என, போராடி வென்றனர்.அடுத்த செட்டை 25 - -19 என வென்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றினர்.அன்னை வேளாங்கண்ணி, நாசரேத், சோகா இகேடா கல்லுாரிகள் முறையே, இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடங்களை கைப்பற்றின.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago