உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புழலில் பொங்கல் விழா கைதிகள் உற்சாக பங்கேற்பு

புழலில் பொங்கல் விழா கைதிகள் உற்சாக பங்கேற்பு

புழல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புழலில் உள்ள மத்திய சிறை கைதிகளுக்கு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.சென்னை, புழல் மத்திய சிறையில், நேற்று காலை முதல் மதியம் வரை, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில், பேச்சு போட்டி, பட்டிமன்றம், சிலம்பம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை போட்டிகள் நடத்தப்பட்டன.கைதிகள் உற்சாகமாக பங்கேற்று வெற்றி பெற்றனர். விழாவில் பங்கேற்ற சிறைத்துறை தலைமை இயக்குனர் முனைவர் மகேஷ்வர் தயாள், அவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை