உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 120 ஆண்டு புளிய மரத்திற்கு மறுவாழ்வு

120 ஆண்டு புளிய மரத்திற்கு மறுவாழ்வு

எழும்பூர், எழும்பூர், அருங்காட்சியகத்தில் 120 ஆண்டுகளாக ஆனை புளியமரம் இருந்தது. கடந்த 2ம் தேதி, இந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்தது. சாய்ந்த மரத்தை மீண்டும் அதே இடத்தில் நடுவதற்கு, அருங்காட்சியக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.அதன் படி, கடந்த 8ம் தேதி, அருங்காட்சியக அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் பசுமை பூமி அறக்கட்டளை அமைப்புகளை சேர்ந்தோர் ஒன்றிணைந்து, சாய்ந்த புளியமரத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டனர்.அருங்காட்சியக அதிகாரிகள் கூறியதாவது:எழும்பூர் அருங்காட்சியகத்தில் 120 ஆண்டுகளாக நிழல் தந்த புளிய மரம், வேரோடு சாய்ந்தது. பார்வையாளர்கள் மற்றும் எங்கள் கோரிக்கையை ஏற்று, மீண்டும் அதே இடத்தில் நடப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை