| ADDED : நவ 16, 2025 02:52 AM
சென்னை: நுங்கம்பாக்கத்தில், போக்குவரத்து போலீசாரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர், லயோலா கல்லுாரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவ்வழியாக வந்த கார், நிறுத்தப்பட்டிருந்த லோடு வாகனத்தின் மீது மோதியது. இதில், லோடு வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் காரில் வந்த மூன்று வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த தலைமைக்காவலர் சென்றபோது, காரில் வந்தவர்கள் போலீசாரை தாக்கி, பீர் பாட்டிலால் குத்த முயற்சித்தனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். நுங்கம்பாக்கம் போலீசாரின் விசாரணையில், சூளைமேடைச் சேர்ந்த அருண்குமார், 28, அனீஷ், 28, கன்னியாகுமரியை சேர்ந்த லட்சுமணன், 30 என்பது தெரிய வந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.