உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  குடிக்க தண்ணீர் கேட்பது போல் வெள்ளி குத்துவிளக்கு திருட்டு

 குடிக்க தண்ணீர் கேட்பது போல் வெள்ளி குத்துவிளக்கு திருட்டு

சென்னை: வீட்டில் தனியாக இருந்த முதியவரிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல், பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி செம்பு ஆகிய பொருட்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூர் கேசவப்பெருமாள் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜன், 83. இவர், கடந்த 12ம் தேதி, மனைவி கோவிலுக்குச் சென்றதால், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, தர்மராஜன் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, தர்மராஜன் தண்ணீர் எடுத்து வர சமையல் அறைக்கு சென்ற போது, பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி செம்பு ஆகிய பொருட்களை திருடி, மர்ம நபர் தப்பினார். இதுகுறித்து, மயிலாப்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவில், தர்மராஜன் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முத்து, 49, என்பவரை, நேற்று கைது செய்தனர். இவரிடம் இருந்து, வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி செம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். முத்து மீது, ஏற்கனவே ஒன்பது திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை